ஏப்ரல் 14,15,16 தேதிகளில் அமீரகத்தில்நடக்கவிருக்கும் நகரத்தார் சர்வதேச வர்த்தக மாநாட்டின்முதல் விழா விளக்க நிகழ்ச்சி மே 14, 2016 அன்று லண்டன், கிழக்குஹாம், ஸ்ரீ முருகன் கோவில் வளாகத்தில் NBIG ஏற்ப்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது

திரு. கருணாமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் விபரம்பதிவு செய்யும் பணி ஆரம்பமாயின.

7.00 மணிக்கு திருமதி.வள்ளி லக்ஷ்மணன், திருமதி. சுஜாதாசேதுராமன், திருமதி. சிவகாமி முத்தையா, திருமதி.கீதாசெல்வகணேசன் ஆகியோரின் இறை வணக்கத்தோடுநிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.திரு. கருணாமூர்த்தி அவர்களின் வரவேற்பு உரையை தொடர்ந்து திரு. பழனியப்ப செட்டியார் அவர்கள்சிறப்புரை நிகழ்த்தினார்.

நகரத்தார் வணிக முயற்சி குழு மற்றும் நகரத்தார் சர்வதேசவர்த்தக மாநாடு மற்றும் IBCN 2017 முக்கிய நோக்கம்ஆகியவற்றின் ஒலி-ஒளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

பின்னர், திரு. இரமேசு இராமநாதன் அவர்கள் IBCN 2017 இன்நான்கு தூண்கள் பற்றி விளக்கினார் .

திரு. ராமநாதன் (GE) “இந்த வார தொழிலதிபர்”, விருதுகள், அமர்வுகள் மற்றும் பதிவுசெய்யும் முறை பற்றி விளக்கினார்.

திரு. அலன் ராமநாதன், திரு. பால் மதி, திரு. ராஜாஅழகப்பன் ஆகியோர் இம் முயற்சியை பாராட்டி உரைநிகழ்த்தினர்.

திரு. செல்வகணேசன் ராமநாதன் அவர்கள் நன்றி உரை நல்கவிழா இனிதே முடிவுற்றது.

ஐக்கிய இராஜியத்தில் வாழும் அனைத்து நகரத்தார்களுக்கும் நன்றிகள் பல. இந்நிகழ்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த பல நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேம்.

இந்நிகழ்ச்சிக்காகக கலந்துகொள்ள ஐக்கிய இராஜியத்தில் பிற பகுதிகளிலில் இருந்தும் லண்டன் முருகன் ஆலயத்திற்கு வந்து கலந்து கொண்ட அனைவருக்கும்நன்றியும் வணக்கமும்.