Annamalai Swaminathan

Father’s Name:Mr.A. Swaminathan

Family/House Name:V.Pl.S. Housee

Hometown: Melaisivapuri

Kovil & Pirivu:Vairavan Kovil, Periya vagupu

Educational qualif:B.E. ( Mech )

Spouse Name:Valliammai Annamalai

Spouse Birthtown: Pon.Pudupatti

E-mail ID: annasona@gmail.com

Business:Advertising, Printing, Events & Conferences, Interior works

Company name & Address: Maestro Advertising Co, PO Box 38098, Kingdom of Bahrain.

No. of Employees: 15

அண்ணார்ந்து பார்க்க வைக்கும் அண்ணாமலை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்பது நிஜமான,உன்னதமான வார்த்தைகள் என்கிறார் திரு.சுவாமிநாதன் செட்டியார் , அலமேலு ஆச்சிக்கு பிறந்த தவபுதல்வர் அண்ணாமலை சுவாமிநாதன்.

இந்த வார்த்தைகள் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தும், தொழில் முனைபபவருக்கும் சாலப்பொருந்தும் என்கிறார், இவர் இவ்வாறு சொல்லக்காரணம் என்ன என்பதை பார்போம்.

மேலைசிவல்புரியை சொந்த ஊராகக்கொண்ட அண்ணாமலை 2000 ஆம் வருடம் பஹ்ரைன் மண்ணில் காலடி எடுத்துவைத்தார்.பஹ்ரைன் 295 சதுர மைல் பரப்பளவு உள்ள சிறிய தீவு ,நாடு சிறியது தான்,ஆனால் அந்த நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களின் கனவுகள் பெரியதாக இருந்தது, நமது அண்ணாமலையும் அதற்கு விதிவிலக்கு அல்ல , பல கனவுகளை சுமர்ந்து கொண்டு களம் இறங்கினர் .

அவாள் பிளாஸ்டிக்ஸ் என்ற கம்பெனியில் பொறியாளராக வேலையில் அமர்ந்தார்,அமர்ந்த குறிகிய காலத்தில் நிமிர்ந்தார் , அந்த கம்பெனியின் முதலாளியும் , சக ஊழியர்களும் அவரை நிமிர்ந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்தார் , சுமார் ஆறு வருட காலம் அந்த கம்பெனியில் அயராது உழைத்து, சைன் போர்டு பற்றி பல நுணுக்களை தெரிந்து கொண்டார், வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டார்.

எந்த ஒரு தொழிலும் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் கை கோர்த்து நடந்தால் தான், வாடிக்கையாளரின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார், அதற்கு ஏதுவாக கிராபிக்ஸ் என்ற அதி நவீன தொழில்நுட்பங்களை கையாளும் கம்பெனிக்கு தன்னை பணிமாற்றம் செய்து கொண்டார், இவர் போகும் இடமெல்லாம் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க ஆரம்பித்தார் , இவரது திறமை பிரகாசப்படுவதை கண்டறிந்த ஆரஞ்சு என்ற கம்பெனி இவருக்கு மேலாளர் பதவியை தருவதாக இவரை அணுகியது .” காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ” என்ற பழமொழிக்கு ஏற்ப, காலம் தாமதிக்காமல் அந்த பதவியை ஏற்றுக்கொண்டார், ஏற்றுக்கொண்டவுடன் அந்த கம்பெனியெய் ஏற்ற பாதையில் பயணிக்க வைத்தார் .

சுமார் 10 வருடம் பிறருக்காக உழைத்து , இவர் பணி செய்த நீறுவனங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறார், இந்த அனுபவம் இவருக்கு பலமாக மாறியது , பலத்தின் பலன் இவரை சொந்தமாக தொழில் செய்ய, சொந்த காலில் நிற்க உந்தியது . 2010 வருடம் சொந்தமாக தொழில் துவங்கும் ஆர்வத்தில் மேஸ்ட்ரோ அட்வெர்ட்ய்சிங் கம்பெனியெய் (Maestro Advertising company) நிறுவினார். பஹ்ரைன் நாட்டில் தொழில் துவங்கிய முதல் நகரத்தார் என்ற பெருமை இவருக்கு உண்டு . பொதுவாக. முதலில் வருபவர்களை அதிகம் பேசப்படுவார்கள் இவரும் மற்றவர்களால் வியந்து அதிகம் பேசப்பட்டார் , ஆனால் இவர் அதிகம் பேசாமல் தொழில் கவனம் செலுத்தினர் .

பொதுவாக புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதல் 6 மாதம் வரை கடினமான பாதையை கடக்கக்கூடும் , ஏனெனில் அவர்கள் தன்னை தானே நிலைநாட்டிக்கொள்ளவேண்டும் , ஆனால் திரு . அண்ணாமலை அவர்களின் பயணம் வித்தியாசமானது , முதல் 6 மாதங்கள் தொழில் அமோகமாக இருந்ததாம், உற்சாக ஊற்று பெருக்கெடுத்து ஓடியதாம், ஆனால் 6 மாதம் கழித்து ஊறிய உற்சாகம் உறைந்து போகும் அளவிற்கு பஹரைன் நாட்டின் பொருளாதாரம் , அரசியல் மேகமூட்டத்தால் இருண்டு சரிய துவங்கியதாம்” நினைத்ததெலாம் நடக்காததால் ” துவண்டுவிடவில்லை நமது அண்ணாமலை. நினைத்ததெல்லாம் நடக்காததால் தெய்வத்தை குறை சொல்லாமல்,தீர்க்கமாக சிந்தித்தார் சந்தித்தார் பல தொழில் முனைபவர்களை , ஆலோசனை பெற்றார், பிறகு துணிந்து செயலில் இறங்கினர் .

வயலுக்கு தண்ணீர்அதிகம் தேவைப்பட்டால், இரண்டு அல்லது முன்று பார்த்திகளை அமைத்து, தண்ணீர் வயலில் விழ செய்வது போல், தனது கம்பெனியின் சேவைகளை விரிவுபடுத்தினார் . புதிய, ஆனால் தற்சமயம் பார்க்கும் தொழில் சார்ந்த சேவைகளை தனது கம்பெனியில் இணைத்துக்கொண்டார் ,விளம்பரச் சாதனங்கள் செய்துகொண்டிருந்த இவர் ” டிஜிட்டல் பேனர்” மற்றும் கார்பொரேட் கம்பெனிகளின் கூட்டங்கள் நடைபெற அரங்குகள். தயார் செய்யும் வேலையிலும் இறங்கினார். இவரது நேர்மை, சொன்னதை சொன்ன விதமாக சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் இவரது திறமையும் , உழைப்பும் கம்பெனிக்கு வரும் வாடிக்கையாளர்களின் வரவை அதிகமாகியது , பிறகு அதுவே வாடிக்கையாய் போனது.

இவர் சொல்கிறார் தொழில் செய்வது என்பது தவம் செய்வதற்கு இணை என்று, இரண்டிற்கும் ” எண்ணம்” ஒரு முகப்படவேண்டும் , சலனம் இல்லாமல் இருக்க பழக வேண்டும் , பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுக்க்காமல் , பிரச்னையை புரட்டிப்போட்டு அதன் முதுகில் சவாரி செய்ய வேண்டும் என்கிறார்.

பாதை தெரிந்தால் புரிந்தால் பயணம் எளிது , இலக்கு தெரிந்தால் இமயமாக இருந்தாலும் அதை அடைந்துவிடலாம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிகர் சந்தானம் சொல்வது போல் fact ,fact .. இவர் சொல்வதும் fact .

பலர் பாதை தெரியாமல் , கை நீட்டும் பக்கம் எல்லாம் போகும் குழந்தையை போல எடுப்பார். கைப்பிள்ளையாய் எல்லாருடைய யோசனைகளையும் கேட்டு, எல்லா திசையிலும் செல்ல முயற்சித்து , ஒரு காலகட்டத்தில் மூச்சுத்திணறி நின்று விடுகிறார்கள் .

அண்ணாமலை கூறுகிறார், தொழில் செய்பவர்கள் பலரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் , ஆனால் முடிவு தொழில் செய்பவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும் , முடிவை மற்றவர்களை எடுக்காவிட்டால் , அல்லது மற்றவர்கள் எடுத்த , பரிந்துரைத்த முடிவை நாம் சுவீகரித்து தொழில் செய்தால் , பெரும்பாலான நேரங்களில் அந்த மாதிரியான முடிவுகள் தொழிலை முடிவிற்கு கொண்டு வந்துவிடும்.

எந்த ஒரு தொழில் சிறக்க வேண்டும் என்றாலும் அதற்கு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் சக ஊழியர்களும் ஒத்துழைத்து , மனம் உவந்து பணிபுரிந்தாலே வெற்றி காண முடியும்.

என்னை பொறுத்தவரையில் நான் எனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரையும் எனது நண்பர்களாக பாவித்து , அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன் , நான் முதலாளி என்று ஒதுங்கி இருக்க மாட்டேன். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் உடன் இருந்து சமாளித்து தீர்வு காண்பேன். உழைப்பவர்களின் ஊதியத்தை உரிய நேரத்தில் கொடுப்பதை எனது தலையாகிய கடமையாக வைத்திருந்தேன், இது எனது ஊழியர்கள் மத்தியில் நல்ல பெயரையும், மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது , எனது வெற்றிக்கு இது ஒரு காரணமாக அமைந்தது.

தொழில் நலிவு அடைந்த காலகட்டத்தில் , நான் தேங்கி நிற்கவில்லை, துவண்டு விழவில்லை நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்தேன். தண்ணீர் ஓர் இடத்தில் தேங்கி நின்றால் , அதனது தனித்தன்மை இழந்து துர்நாற்றம் அடிக்கும் சாக்கடையாய் மாறிவிடுவதை போல , செயல்படாமல் நிற்கும் மனமும் தொழிலும் துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும் என்பதை உணர்ந்து செயல்பட்டேன், படிப்படியாக மாற்றங்கள் தென்பட்டது. அந்த இக்கட்டான காலகட்டத்தில் எனக்கு உற்சாகம் ஊட்டியவர் எனது வாடிக்கையாளராக இருந்த ஒரு Bahraini நண்பர் , அவரது உந்துதலில் காரணமாகவே “ஈவென்ட்ஸ் ஆர்கனிசிங் ” பணியில் இறங்கினேன் , இது எனக்கு ஒரு திருப்புமுனியாகவும் , எனது தொழில் புதிய கிளையாக துளிர்த்து வளர்ந்தது, இன்று நான் இத்துறையில் பாகிரைன் நாட்டில் விறல் விட்டு எண்ணக்கூடிய நபர்களில் ஒருவர் நான். ஒரு கதவு மூடப்பட்டால் , மற்றோரு கதவு திறக்கப்படும் என்ற வாசகம் என்னை பொறுத்தவரையில் நிஜமானது ….என் வாழ்க்கையில் நிழல் நிஜமானது

எந்த ஒரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பதாக சொல்வார்கள், இவரது வெற்றிக்கு பின்னால் ஒரு குடும்பமே இருந்தது என்றால் அது மிகையாகாது . இவரது பெற்றோர்களும் , மனைவி வள்ளியம்மை அண்ணாமலையும் இவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். இவரது தொழில் சிறக்க வேண்டும் என்பதற்காக இவரது மனைவி தங்களது ஒரே மகளை கூடிக்கொண்டு தாயகம் வந்து ஒரு வருட தங்கிருந்து பிறகு கணவனின் தொழில் செழித்து வளர்ந்த பின்னர் பஹ்ரைன் நாட்டிற்கு திரும்பி வந்தார்.

என்ன மனைவி மிகவும் அனுசரணையாக இருந்தார், ஒத்துழைத்தாருன்னு சொல்லிட்டு, அவர் தாயகம் சென்று தொழிலில் நிலைத்து நின்ற பின் மீண்டும் வந்து எண்னிடம் இணைந்து கொண்டர்னு சொல்ரரான மனைவி தொந்தரவு பண்ணாம ஒதுங்கி இருந்தாருங்கற அர்த்தத்துல சொல்றன்னு நினைச்சீங்களா என்று ஒரு புன்முறுவலுடன் தொடர்ந்தார், மனைவி கூடஇருந்து உறுதுணையா, சேர்ந்து உழைக்கணும்னு அவசியம் இல்லை, ஒதுங்கி நின்று ஒரு ஆண், கணவன் குடும்பத்தாருக்கும், குழந்தைகளுக்கும் ஆற்ற வேண்டிய கடைமையை தனித்து நின்று திறம்பட சமாளித்து, நீ குழந்தைகளை பற்றியோ, உன் தாய் தந்தையர் பற்றியோ நீ கவலைப்படாதே நான் சிறப்பாக பார்த்துக்கொள்கிறேன் என்று ஒரு பெண் செயல்படுவது, தொழில் முனைபவர்களுக்கு மிகுந்த பலத்தையும் உற்சாகத்தையும் தரும், இந்த உறுதுணையும், ஒத்துழைப்பையும் தான் என் மனைவி எனக்கு கொடுத்தார். ” இத …. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்னு ” காப்பி விளம்பரத்துல வர்ற டயலாக்கு மாறி என் மனைவியிடம் இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் ….என்று சொல்லி புன்னகைத்தார்.

வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் இதுதான் ….. வாருங்கள் வர்த்தகம் செய்யுங்கள், வளமாக வாழுங்கள், மற்றவர்கள் வாழ்க்கையில் வசந்தம் சேருங்கள், நம் சமுதாயத்தை வறுமை அண்ட விடாமல் இருக்க வழி செய்யுங்கள். நீங்கள் சமூகத்திற்கு பெரிய அளவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதற்கு நீங்கள் சொந்த தொழில் செய்பவராக அவதாரம் எடுத்தாலே சாத்தியம்.

தொழில் முனைபவராக எல்லா முயற்சிகளையும் மனம் தளராமல் எடுங்கள் , தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம். ” முயற்சியுடையர் இகழ்ச்சி அடையார் ” வாழ்க வளமுடன் என்று சொல்லி பெட்டியை நிறைவு செய்தார்.

தொழில் சிறக்க சொந்த உழப்பும் , உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் , இவருக்கு இரண்டும் கிடைக்க பெற்றதால் ,ஓங்கி வளர்ந்து. கொண்டு இருக்கிறார். இவர் மென்மேலும் சிறக்க பல வெற்றிகளை தொழிலில் பெற வாழ்த்துவோம் .

பேட்டியும் எழுத்தும் : சோம சேகர் , பொன் புதுப்பட்டி