S.Natarajan

Father’s Name:N.Saminathan

Family/House Name: Neyyaranchetti Veedu

Hometown: Melaisivapuri

Kovil & Pirivu: Pillayar Patti

Education:MBA

Spouse Name: N.Alagammai

Spouse Birthtown: O.Siruvayal

E-mail ID: Natarajan@themeditube.com

Website: www.themeditube.com

Business: Medical Education

Company name & Address: TheMediTube.com, 58 (44/2), Landons Road, Kilpauk, Chennai 600010.

No. of Employees: 10 Member Start up

Awards /Recognition:

  • Best Start-up Pitch Award – TiE 2015.
  • Shortlisted Top 9 Companies for the Chinnikrishnan Innovation Award given by Madras Management Association & Cavin Kare

இணையம் மூலம் இமயம் தொட்ட நடராஜன்!

“பல லட்சம் பேருக்கு எது பெரிய பிரச்னைன்னு பாருங்க… அதுக்கான தீர்வைக் கண்டுபிடிங்க… காசு கொட்டும்!’’ என்று வெற்றி ஃபார்முலாவைவெட்ட வெளிச்சமாக்குகிறார் சாமி.நடராஜன். முத்தான மூன்று வரிகளில் சொன்னாலும் இதைக் கண்டுபிடிக்க இவருக்கு 3,000 நாட்களுக்கு மேல்தேவைப்பட்டிருக்கிறது.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் நடராஜன். அப்பா சாமிநாதன் மருந்துப் பொருள் வியாபாரத்தில் சென்னையின் முக்கியஸ்தர். பல கோடி வர்த்தகம். தமிழகம் முழுவதும் மொத்தமாகவும், சில்லறையாகவும் மருந்துப் பொருட்கள் விநியோகம் செய்கின்றனர். ஒரு தம்பி. மருத்துவரான அவரும் கிடைக்கும் நேரத்தில் அப்பாவுக்குத்துணையாக வியாபாரத்தில் உதவி வருகிறார். 33 வயதாகும் நடராஜனின் மனைவி அழகம்மையும் குடும்பத் தொழிலில் உதவியாக இருக்கிறார்.

குடும்பத்தொழிலில் நடராஜன் மட்டும் மிஸ்ஸிங்! காரணம், நடராஜனின் பிடிவாதம்… மாற்றி யோசிக்கும் குணம்… தனியே வெல்ல வேண்டும் என்ற வேகம்… சொன்ன மாதிரியே தாம் ஒரு ஜெயிக்கிறகுதிரை என்று நிரூபித்திருக்கிறார் நடராஜன். கால மாற்றத்துக்கும் தொழில் நுட்ப வேகத்தையும் கையில் எடுத்து உலகம் முழுக்க இருக்கிறமருத்துவர்களுக்குப் பல்வேறு வகையிலும் பயன்படும் இணையதளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்திய அளவில் வெற்றிகரமாக நடைபெற்று இந்தஇணைய நுட்பத்தை மேலும் பெரிதாக்க பல்வேறு டீம்களை அமைத்து, உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மெடி ட்யூப் என்பது இவரது நிறுவனம். நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்று கம்பீரமாக இருக்கிறது இவரது அடையாளம். இது இவரது முதல்தொழில் அல்ல… சில விஷயங்களை முயன்று பார்க்கும்போது, கிடைத்த விதையை விருட்சமாக்கி இருக்கிறார்.

‘‘லயோலா கல்லூரியிலே பி.காம் பண்ணினேன். டெல்லியிலே எம்.பி.ஏ முடிச்சேன். அங்கேயே வேலை கிடைச்சது. இது 12 வருஷம் முன்னாடி நடந்தது. ஒருவிளம்பர நிறுவனத்திலே கேனான் மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் செய்து தரும் வேலை பெற்றது நல்ல அனுபவம். அதுக்குமுன்னாலே விளம்பரங்கள்ன்னா பார்ப்போம்… கேட்போம். முதல் முறையாக விளம்பரத்தைத் தொடர்ந்து அது பற்றிய சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்புகொடுக்கிற விளம்பரங்களை முயற்சி பண்ணி, பெரிய பாராட்டு கிடைச்சது.

தொடர்ந்து வென்ச்சர் இன்டலிஜென்ஸ்ங்கிற கம்பெனியிலே உயர் அதிகாரி பதவி கிடைச்சது. அங்கே கிடைச்ச தகவல் ஆச்சர்யமானது. நாட்டிலிருக்கிற மிகமுக்கியமான நிதி முதலீடுகளின் அளவு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய். இது வெறும் 8,000 முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே நடக்குதுன்றதுதெரிஞ்சது. எவ்வளவு பெரிய தொகை… எத்தனை சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள்ங்கிற இந்த காம்பினேஷன் என்னை

வியக்க வெச்சது. பெரியகம்பெனி. அப்பவே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம். ஜாலியா இருந்தது வாழ்க்கை.

ஆனா, சின்ன வயசிலே இருந்தே எனக்கு பிஸினஸ் மேல தான் ஆர்வம். எதிலே போகலாம்ன்னு என்னோட தேடலை நடத்தவும், தொழில்ன்னா என்னன்னுகத்துக்கவும் அந்த இரண்டரை வருஷத்தைப் பயன்படுத்திக்கிட்டேன். சில நண்பர்கள் அறிமுகத்தால, கல்வித் துறையிலே கால் பதிக்கலாம்ன்னு முடிவுபண்ணினேன். வேலையை விட்டுட்டு, புது பிஸினஸ் ஆரம்பிக்கப் போறதா வீட்ல சொன்னேன்.

‘எதுக்குப் புது பிஸினஸ்..? நம்ம குடும்ப வியாபாரத்துக்கு வந்துடு. நம்ம மருந்து சப்ளை ஆஃபீஸ்களிலே ஏதாவது ஒன்னுல சேர்ந்து தொழிலைக்கத்துக்க!’ன்னு அப்பா கூப்பிட்டார். பிடிவாதமா நின்னேன். ‘நான் எனக்குன்னு ஒரு தொழில் தொடங்கி சொந்தக் காலிலே நிற்க ஆசைப்படறேன். இந்தியாமட்டுமில்லாம உலகம் முழுக்க பேர் சொல்ற மாதிரி ஒரு பிஸினஸ் பண்ணனும்ன்னு விரும்பறேன்!’னு வாதம் பண்ணினேன். என் முயற்சிக்கு எதிர்ப்புதெரிவிச்சாலும், குடும்பத்தார் பிடிவாதம் பண்ணலை… அது எனக்கான பெரிய ப்ளஸ் பாய்ண்ட்!’’ என்ற நடராஜன், தன் கல்வி பிஸினஸ் பற்றி சொன்னார்.

‘‘உலகின் மிகப் பெரிய அறிஞர்கள், முக்கியமான காலகட்டத்திலே, சிக்கலான தருணங்களிலே என்ன மாதிரி முடிவுகளை எடுத்தாங்க..? அவங்களோடபுத்திசாலித்தனம் எப்படி வேலை செய்தது..? என்பது அடிப்படை. இதைக் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்த்தா, உலகமே வியக்கற புத்திசாலியான, தீர்க்கமானஎதிர்காலத்தை உருவாக்கலாமே!’ இதுதான் எங்க திட்டம். நிறைய நேரம் செலவு செய்து, பல புத்தகங்கள் படிச்சு சிலபஸ் தயார் செய்தோம். இதைபள்ளிகளுக்கு எடுத்துட்டுப் போனபோது, ஒருசில தனியார் பள்ளிகள் இதை சரியா புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு தந்தாங்க. டெக்னிகலான திட்டமிடல்இல்லாததால, எங்களால பெரிய அளவில் இதை எடுத்துட்டுப் போக முடியலை… ஒரு கட்டத்திலே அதை விட்டு வெளியே வந்துட்டேன்.

இந்தக் காலகட்டத்திலே, எங்க நிறுவன மெடிகல் ரெப் ஒருத்தர்கிட்டே பேசிட்டிருந்தபோது, கிடைச்ச தகவல் புதிய தொழிலுக்கு வழிகாட்டியது. இந்தியமருத்துவத்துறை என்பது ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் மருந்துப் பொருட்களையும், 50 ஆயிரம் கோடி ரூபாய் உபகரணங்களையும் உள்ளடக்கியது. இந்தவியாபாரத்தை நடத்தறது வெறும் பத்து லட்சம் மருத்துவர்கள். இவர்களோட பிரிஸ்க்ரிப்ஷன் மூலம் தான் இந்த வர்த்தகம் நடக்குது. அவங்களுக்குமார்க்கெட்ல இருக்கிற அப்டேஷனைக் கொண்டு போறது மெடிகல் ரெப் தான். ஆனா, அவங்களால முழுமையான தகவலைக் கொண்டு சேர்க்கமுடியலைன்றதைப் புரிஞ்சுக்கிட்டு மருத்துவர்களுக்கு உதவற வகையில் தினசரி நிகழ்வுகளை, செய்திகளை இணையம் மூலமாகவும், மெயில் மூலமாகவும்டாக்டர்களுக்குத் தர்றதுன்னு முடிவு பண்ணினேன்.

இன்னொரு சிந்தனை. ‘அவங்களால படிக்க தானே முடியாது..? வீடியோவா கொடுத்தா பார்க்க முடியுமே! ட்ரெட் மில்லிலே நடந்துக்கிட் டே வீடியோ பார்க்கமுடியும். ஹாஸ்பிடல் போறபோது கார் பயணத்திலே பார்த்துக்க முடியும். ஆடியோவா கொடுத்தா வாக்கிங் போகிற சமயத்திலே ஹெட் போன்ல கேட்கமுடியுமே!’ன்னு தோணுச்சு. களத்திலே இறங்கி, வெப்சைட்டை உருவாக்கினோம். முக்கியமான ஆபரேஷன் வீடியோக்களை அப்லோட் பண்ணினோம்.கேரளாவிலே, முழு கையையும் இழந்த ஒருத்தருக்கு, விபத்தில் இறந்தவரின் கையைப் பொருத்தி, இந்தியாவில் முதல்முறையா சாதனைபண்ணியிருந்தாங்க. அந்த வீடியோவை வாங்கி இணையத்திலே எல்லா டாக்டரும் பார்க்கிற மாதிரி அப்டேட் பண்ணினோம். நல்ல வரவேற்பு கிடைச்சது.

இதுக்கெல்லாம் செமையா செலவு ஆகும்ங்கிறபோது, முதலீட்டுக்கு ஒரு ஐடியா பிடிச்சேன். உதாரணத்துக்கு ரூ.50 லட்சம் திரட்டணும்ன்னாதான்கஷ்டம் மாதிரி தெரியும். அதையே 50 ஒரு லட்சமா புரட்டினா கஷ்டமாத் தெரியாதுங்கிற கான்செப்ட் பிடிச்சேன். என் பிராஜெக்ட் ரிப்போர்ட்டைசிலர்கிட்டே சொன்னபோது தாராளமா என் நிறுவன ஷேரை வாங்கிக்கிட்டாங்க. 10 வருஷம் கழிச்சு என் நிறுவனத்துக்குக் கிடைக்கப்போற லாபத்தை இப்பவேகிடைச்சா மாதிரி நான் சொல்லி, பிரீமியம் ரேட்ல ஷேர் வித்தேன்.

‘சிம்பிளா சொல்லணும்ன்னா, நான் பல ஆயிரம் அடி தோண்டி கீழே இருக்கிற தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். அதிலே ஒரு பீஸ் இங்கேஇருக்கு. இன்னும் பல டன் உள்ளே இருக்கு. அதையெல்லாம் எடுத்தா நாம எங்கேயோ போயிடலாம். கூட வர்றீங்களா..?’ இதுதான் நான் மூலதனம்திரட்டிய விதம்.

50 க்கும் மேற்பட்ட இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள் இவரது ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதனால், எந்தத் தவறான தகவலும் இடம்பெற்றுவிட முடியாது என்பதை உறுதி செய்கிறார். டெல்லியில், மும்பையில் என்று முக்கியமான ஆலோசனை அரங்குகளுக்குச் சென்று நேரத்தை செலவுசெய்ய முடியாத மருத்துவர்களுக்கு நடராஜனின் இணையதளம் பொக்கிஷம். அந்த கருத்தரங்கை அப்படியே கவர் செய்து, எந்தத் துறை டாக்டருக்கு எதுதேவையோ அதை மட்டும் பிரித்தெடுத்து, இணையத்தில் உலாவ விட்டிருக்கிறார். சொற்ப செலவில் குறிப்பிட்ட துறை மருத்துவர் வெவ்வேறு கருத்தரங்கின்பயன்களைப் பெற்றுவிட முடிகிறது. புதுமை மருத்துவம், முதல்முறை ஆபரேஷன்கள், உலகை உலுக்கும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகள், அதற்கானதீர்வுகளுக்கான ஆய்வுகள்… இப்படிப் பல ஆயிரம் வீடியோக்கள் இவரது www.themeditube.com இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டில் உள்ள 10 லட்சம்டாக்டர்களில் இவர் தேர்வு செய்தது, 2 லட்சம் பேரை மட்டும்தான். அவர்களது தேவை அறிந்து தகவல்களை அப்டேட் செய்வது மருத்துவத் துறையினருக்குவரப்பிரசாதம்.

இதனால்தான், இந்த இணையத்தை ‘வாவ்..!’ என வாரி அணைத்துக் கொண்டுள்ளனர் மருத்துவர்கள்.

போட்டி கிடையாது… தேடி வந்து வருமானம் தரும் வாடிக்கையாளர்கள்… நாளுக்கு நாள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொண்டே ஆக வேண்டிய துறை… இந்தஇணையதளம் பற்றிய தகவல் வைரலாகப் பரவும்போது, இந்தியாவின் எந்த மூலையிலிருப்போரும் முன்னறிமுகமின்றி எந்த மருத்துவரும் சந்தாதாரர் ஆகும்வாய்ப்பு… இப்படித் தெளிவான தொழிலை அருமையாகக் கையில் எடுத்திருக்கிறார் நடராஜன்.

இந்தியாவில் 4 ஆயிரம் இதயநோய் மருத்துவர்கள் இருக்கிறார்கள், மார்பகப் புற்றுநோய் மருத்துவர்கள் வெறும் 2 ஆயிரம் பேர்தான் என்று ‘விஞ்ஞானவிஜய்காந்’தாக புள்ளி விவரங்கள் அடுக்குவது இவரது கடும் உழைப்பின் பின்னணி. எனவேதான், யாருக்கு எது தேவை… எங்கெல்லாம் இடைவெளிஇருக்கிறது என்று பார்த்துப் பார்த்து இவரால் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது. பல ஆயிரம் மருத்துவர்கள் உலவும் தளம் என்பதால், மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள், தங்கள் பொருட்களை விற்க இவரை நாடி வரஆரம்பித்துள்ளனர். மருத்துவர்களுக்குள்ளான பரஸ்பர தேவைகளைத் தீர்க்கவும் இவரது டீம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா தாண்டியும்நேபாளம், பாகிஸ்தான், மியான்மர், இலங்கை என்று மத்திய கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் இருந்து இவர்களுக்கு அழைப்பு வரத் துவங்கி உள்ளது.அடுத்த சில ஆண்டுகளில் இதை உலகளாவிய நெட் ஒர்க்காக மாற்றும் முயற்சியில் இருக்கிறார் நடராஜன். அவர் நினைத்தது நடக்கத் தொடங்கி உள்ளது.இளம் மருத்துவர்களிடம் இவர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு துறை சார்ந்த வல்லுநர்களை ஒரு இடத்தில் ஒருங்கிணைய வைத்துவிட்டால், அத்துறையில் எதையும் செய்து பார்க்க முடியும் என்பதற்குநடராஜனின் செயல்பாடுகள் சிறந்த உதாரணம். ஆனால், எத்தனை அடியில் நீர் கிடைக்கும் என்று தெரியாமல் அவர் காத்த பொறுமை மிக அவசியம்.நம்பிக்கையைக் கைவிடக் கூடாது என்பதும் அதில் அடக்கம்.

‘‘30 வயதுக்குள்ளாகவே ஏதாவது ஒரு வேலை பார்த்து அனுபவத்தை சேகரித்துவிட வேண்டும். அதன்பிறகு முடிந்தவரை விரைந்து தொழிலுக்குள்வந்துவிடுவது நல்லது. ஒரே நோக்கத்தோடு இருந்தாக வேண்டும் என்பதால், இ.எம்.ஐ வாழ்க்கைக்குள் போகாமலிருப்பது நல்லது. அடிப்படைத் தேவைகள்தவிர்த்து எதிலும் சிக்கிக் கடனாளி ஆகிவிடக் கூடாது. ஆசைகளை அடக்கி, தேவைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதே நல்ல வளரும் தொழிலதிபருக்குஅழகு. எல்லாவற்றுக்கும் மேலாக நான் முதலிலேயே சொன்னது மிக முக்கியம்!’’ என்று கட்டுரையின் ஆரம்ப வரியை நினைவூட்டுகிறார்.

‘பிரச்னைகளை பிஸினஸ் ஆக்குங்கள்’ என்கிற நம்பிக்கை நாயகன் நடராஜன் நம்மவர் என்பதில் பெருமை கொள்வோம்.

பேட்டி, கட்டுரை : எஸ்.பி. அண்ணாமலை